உலகிலுள்ள அறநெறியாளர்களுள், உலகளாவிய பார்வை உடையவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் நம் குறளாசான் வள்ளுவரும் அறிவாசான் தந்தை பெரியாரும் மிக மிக முக்கியமானவர்கள். அப்படிபட்ட முக்கியமான இரு அறிவுக்கடல்களைப் பற்றி இந்த ஒரு துளி நீர் என்ன எழுதிவிடப் போகிறது என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை. இந்த ஒரு துளி நீர் அந்தக் கடல்களோடு கலப்பதற்கான முயற்சிதான் இது. வள்ளுவர் , தந்தை பெரியார் ஆகிய இருபெரும் ஆசான்களும் வாழ்ந்த காலங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இருவரின் ஒரே நோக்கமும் தமிழினத்தை நல்வழிப்படுத்துவதுதான். “ திராவிடர் கழகம் திருக்குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத்தன்மை ஏற்படப்பாடுபட்டு வரும் கழகத்திற்கு திருக்குறள்தான் வழிகாட்டி”
என்று தந்தை பெரியாரே சொல்லுகிற அளவுக்கு திருக்குறள் மேன்மையானது. திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் அவர் உருவாக்கிய திருக்குறள் அப்பெருமையை நமக்கு வழங்கியிருக்கிறது.
இலக்கியம் என்பது என்ன? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக உருவாக்கப் பட வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாகவும், நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநிலை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்கத் தூண்டுவதாகவும் இருக்கவேண்டும்.
மதம், கடவுள் சம்பந்தமில்லாத , யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும். சேக்ஸ்பியரால் இங்கிலாந்து புகழ் பெற்றது போல், ஹோமரால் கிரேக்கம் சிறப்பு அடைந்ததுபோல், வள்ளுவரால் தமிழ்நாடு புகழ் அடைந்தது.
புராண, இதிகாச மூடநம்பிக்கை நூல்களைப் புறக்கணிக்கிற மனநிலையைத் தமிழரிடையே தோற்றுவிக்கும் பொருட்டு 1948இல், சென்னையில் முதன்முதலாகத் ‘திருக்குறள் மாநாடு’ நடத்தியவர் அறிவாசான் பெரியார்.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு.
அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பெரும்பிரிவுகளில் வரும் 1330 குறட்பாக்களிலும் மனித வாழ்வைத்தான் முன்னிருத்தியிருக்கிறார். வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் "பகுத்தறிவாளர்" எனக் கூறலாம். வெகுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, நெடுங்காலமாய்ப் பின்பற்றப்படுவது என்பதற்காக மட்டுமே எந்த ஒரு காரியத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அறிவுசார் தத்துவத்தை சொன்னார் பெரியார். அதே கருத்தை வள்ளுவரும் ,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் வாழ்ந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அதைத்தான் வள்ளுவர் செய்தார், 20ம் நூற்றாண்டில் வள்ளுவர் வாழ்ந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அதைத்தான் தந்தை பெரியார் செய்தார்.
தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக்கையும், தீண்டாமையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார் பெரியார். மனிதனை மனிதன் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது, தெருவிலே நடக்கக் கூடாது, பொதுக்குளத்திலே தண்ணீர் எடுக்கக் கூடாது, கோவிலுக்குள் செல்லக்கூடாது, பார்ப்பனர்கள் வீதியிலே வந்தால் துண்டை இடுப்பிலே கட்டிகொண்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்றெல்லாம் இருந்த நிலையை மாற்ற தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்தார் பெரியார். இதே கருத்தை,
தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக்கையும், தீண்டாமையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார் பெரியார். மனிதனை மனிதன் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது, தெருவிலே நடக்கக் கூடாது, பொதுக்குளத்திலே தண்ணீர் எடுக்கக் கூடாது, கோவிலுக்குள் செல்லக்கூடாது, பார்ப்பனர்கள் வீதியிலே வந்தால் துண்டை இடுப்பிலே கட்டிகொண்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்றெல்லாம் இருந்த நிலையை மாற்ற தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்தார் பெரியார். இதே கருத்தை,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; என்ற ஒரே வரியில் சாதி, மதத்தின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறையையும் எதிர்ப்பதோடு, பிறப்பால் அனைவரும் ஒன்றே என்பதை வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
அறிவும் சிந்தனையும்தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் என்று உணர்ந்து பகுத்தறிவுச் சிந்தனையை தமிழர்க்கு ஊட்டியவர் பெரியார்.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
என்னுடைய ரேனும் இலர்.
என்று வள்ளுவரும் அறிவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்
இல்லை இல்லை என்று சொல்கிறவர்; ஒழிக, ஒழிக என்று சொல்லக் கூடியவர்; எதிலும் எதிர்மறைப் பார்வைதான் பெரியாருடையது என்று வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று விமர்சனம் செய்பவர்கள் உண்டு. எதை இல்லை என்றார், எதை ஒழிக என்றார் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நியாயங்களும், விளைவுகளும் என்னவென்று புரியும்.
அறிவு என்பது உணர்தலாலும், அனுபவத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவது. பகுத்தறிவு என்பது எந்த ஒரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்டு அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிவதாகும். அப்படிப்பட்ட பகுத்தறிவை தமிழர்க்கு சொல்லித்தந்தவர் அறிவாசான் பெரியார்.
அறிவு என்பது உணர்தலாலும், அனுபவத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவது. பகுத்தறிவு என்பது எந்த ஒரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்டு அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிவதாகும். அப்படிப்பட்ட பகுத்தறிவை தமிழர்க்கு சொல்லித்தந்தவர் அறிவாசான் பெரியார்.
கடவுள் இல்லை என்று அவர் சொன்னார் என்றால் - இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பு, அவனின்றி ஓர் அணுவும் அசையாது, நம்மால் ஆவது ஒன்றும் இல்லை; அவன் ஏற்கெனவே தீர்மானித்தபடி தான் எல்லாம் நடக்கும் என்றும், மனித அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும் அவமதிக்கும், அலட்சியப்படுத்தும் மோசமான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிட இல்லாத ஒன்றின்மீது நம்பிக்கை வைத்து இழப்புக்கு ஆளாகிறார்களே மனிதர்கள் என்பதால் தான் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று அழுத்தமாகக் கூறியுள்ளார் அந்த அறிவுலக ஆசான்.
ஒழிக என்று அவர் சொன்னதற்குக் காரணம் - மதமும், சாத்திர நம்பிக்கைகளும் மனிதனின் சிந்தனையைப் பாழ்படுத்தியதால்தான். எதையும் அறிவுப் பூர்வமாக அணுகுவது, விஞ்ஞான ரீதியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வது. திட்டமிடுவது, தோல்விக்கு விதியின் மீதோ, கிரகத்தின் மீதோ, பிறர் மீதோ பழிபோடாமல், அதற்கான பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்வது, அந்த அனுபவத்தின் மூலம் அடுத்து அந்தத் தவறுகளைச் செய்யாதிருப்பது, பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது, மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்களுக்கு உரிமை கொடுப்பது போன்றவைகளின் முக்கியத்துவத்தை மானிட சமுதாயத்திற்கு உணர்த்தியவர் தந்தை பெரியார்.ஒரு கடவுள் மறுப்பாளர் சமூகத்தில் உயர் மதிப்பீட்டை பெற முடியும் என்பதற்குத் தாமே சாட்சியமாகியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவரது பகுத்தறிவு கொள்கைகளும், சுயமரியாதை சிந்தனைகளும்தான் இன்றைக்கு தமிழகத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்டு வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள் என்று சொல்லி தன் கருத்தானாலும் அது பரிசீலனைக்கு உட்பட்டது என்று வெளிப்படையாக பேசியதால்தான் இராமன் படத்தை எரித்த இராமசாமியைத் தமது இனமானத் தந்தையாக, தலைவராக தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்.
குறளாசான் வள்ளுவரும், அறிவாசான் தந்தை பெரியாரும் ஒரே நேர்க்கோட்டில் தமிழகத்தை நெறிப்படுத்தியவர்கள். ஆகவே, குறளாசான் எழுதிய திருக்குறளைப் படித்து புரிந்து கொண்டு, அறிவாசான் அறிவுறுத்திய படி அனைத்தையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பகுத்தறிவுள்ளவர்களாக நாம் வாழும்போதுதான் எங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மலரும்; அதன் மூலம்தான் பலரை வாழ்வித்து நாமும் வாழ முடியும், அதற்கான முயற்சியை இளையோராகிய நாம் எடுக்க வேண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
- புஷ்பராஜ்
